செய்திகள்
தினேஷ் திரிவேதி எம்பி

மேற்கு வங்க வன்முறை- பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.

Published On 2021-02-12 08:49 GMT   |   Update On 2021-02-12 08:49 GMT
மேற்கு வங்க வன்முறையால் வேதனை அடைந்துள்ளதாக கூறிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி:

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் மோதல்கள், போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியின்போதும் வன்முறை ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இன்று மாநிலங்களவையில் இதனை அறிவித்தார். மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை மிகவும் வேதனை அளிப்பதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.

‘மாநிலத்தில் நடக்கும் வன்முறை தொடர்பாக இங்கே எதுவும் பேசமுடியவில்லை. எனது கட்சி, என்னை எம்.பி. ஆக்கி இங்கு அனுப்பியதற்கு நன்றி. ஆனால், மாநிலத்தில் வன்முறை தொடர்பாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைக்கையில் கஷ்டமாக உள்ளது. இங்கே உட்கார்ந்து எதையும் செய்ய முடியாவிட்டால், ராஜினாமா செய்துவிடு என்று என் ஆன்மா என்னிடம் கூறுகிறது. மேற்கு வங்க மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்றார் தினேஷ் திரிவேதி.
Tags:    

Similar News