செய்திகள்
நாசா

நாசா வெளியிட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-02-12 05:12 GMT   |   Update On 2021-02-12 05:12 GMT
நாசா வெளியிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


சூரியனின் மேற்பரப்பு போன்று காட்சியளிக்கும் படம் ஒன்று நாடு முழுக்க பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நாசா வெளியிட்ட மிகவும் தெளிவாக காட்சியளிக்கும் சூரியனின் மேற்பரப்பு படம் எனும் தலைப்பில் வைரல் படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 

வைரலாகும் படத்தை இணையத்தில் தேடிய போது, அதனை அமெரிக்க புகைப்பட கலைஞரான ஜேசன் குயிசெல் எடுத்த புகைப்படம் என தெரியவந்தது. மேலும் அவர் அதனை எடிட் செய்த பின் இணையத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். உண்மையில் இதனை நாசா வெளியிடவில்லை.



பலர் இந்த படத்தை உண்மையென கருதி பகிர்ந்து வரும் நிலையில், சிலர் இது சூரியனின் மேற்பரப்பு கிடையாது என்றும் சிலர் இது கற்பனையில் வரையப்பட்ட படம் என்றும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில் வைரல் படத்தை நாசா வெளியிடவில்லை என்பதும் அது சூரியனின் மேற்பரப்பு கிடையாது என்பதும் தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News