செய்திகள்
கோப்புப்படம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூல் - பெஜாவர் மடாதிபதி தகவல்

Published On 2021-02-11 00:44 GMT   |   Update On 2021-02-11 00:44 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக பா.ஜனதா கட்சியினரும், பல்வேறு இந்து அமைப்பினரும் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினரும், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்திபெற்ற பெஜாவர் மடத்தின் மடாதிபதியுமான விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி நேற்று உடுப்பிக்கு வந்தார். மடத்திற்கு சென்ற அவர் மடத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. நான் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நன்கொடை வசூலித்தேன். இந்த பயணம் எனக்கு திருப்திகரமாக உள்ளது. அனைத்து தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கி உள்ளனர். இது மக்களின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் காட்டுகிறது.

ராமர் கோவில் அமைய உள்ள ஒரு பகுதிக்கு தத்துவவாதி மத்வாச்சாரியாரின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News