செய்திகள்
அமித்ஷா

நான் தாகூர் நாற்காலியில் அமரவில்லை: அமித்ஷா திட்டவட்ட மறுப்பு

Published On 2021-02-10 02:48 GMT   |   Update On 2021-02-10 02:48 GMT
ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறிய குற்றச்சாட்டு தவறானது. நான் ரவீந்திரநாத் தாகூர் நாற்காலியில் அமரவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மறுத்தள்ளார்.
புதுடெல்லி :

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சமீபத்தில் மேற்கு வங்காள மாநிலம், சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தபோது, ரவீந்திரநாத் தாகூரின் நாற்காலியில் அமர்ந்தார் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கூறினார்.

இதை அமித்ஷா நேற்று திட்டவட்டமாக மறுத்தார். இதையொட்டி மக்களவையில் பேசிய அமித்ஷா, “இந்த சபையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறிய குற்றச்சாட்டு தவறானது. நான் ரவீந்திரநாத் தாகூர் நாற்காலியில் அமரவில்லை” என மறுத்தார். “இதற்கு ஆதாரமாக சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எழுதிய கடிதம் உள்ளது. அக்கடிதத்தில், அந்த நினைவுச்சின்னத்துக்கு செல்வோர் அமர்ந்து தங்கள் எண்ணங்களை எழுதுவதற்காக போடப்பட்டுள்ள ஜன்னலோர நாற்காலியில்தான் நான் அமர்ந்தேன் என எழுதப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

எனவே ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

Similar News