செய்திகள்
கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் 29 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை

Published On 2021-02-10 01:40 GMT   |   Update On 2021-02-10 01:40 GMT
5 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் உள்ளனர். 29 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிர் இழப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 212 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 241 ஆக உள்ளது.

பெங்களூரு நகரில் 195 பேர், தட்சிண கன்னடாவில் 29 பேர், துமகூருவில் 17 பேர், பெங்களூரு புறநகரில் 20 பேர், மைசூருவில் 15 பேர் உள்பட 366 பேர் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் மட்டும் 2 பேர் இறந்தனர். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 513 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 9 லட்சத்து 25 ஆயிரத்து 167 பேர் குணம் அடைந்து உள்ளனர். 5 ஆயிரத்து 785 பேர் சிகிச்சையில் உள்ளனர். 143 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று 60 ஆயிரத்து 485 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக 1 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரத்து 719 பேருக்கு பரிசோதனை நடந்து உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News