செய்திகள்
வைரல் புகைப்படம்

சோக கதையுடன் வைரலாகும் பேராசிரியர் புகைப்படம்

Published On 2021-02-08 05:02 GMT   |   Update On 2021-02-08 05:02 GMT
சமூக வலைதளங்களில் சோக கதையுடன் வைரலாகி வரும் பேராசிரியர் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


தாய் மற்றும் தந்தையர் ஒற்றை நபராக குழந்தைகளை வளர்த்து எடுப்பது பற்றி பல்வேறு சம்பவங்களை கடந்து வந்திருக்கிறோம். அந்த வரிசையில் நபர் ஒருவர் குழந்தையை தன் மீது வைத்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் நாடு முழுக்க சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படத்தில் இருப்பது கல்லூரி பேராசிரியர் என்றும் அவரது மனைவி பிரசவத்தின் போது உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. தாய் மரணித்ததால், பேராசரியர் தனது குழந்தையுடன் பாடம் எடுப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பது மெக்சிகோவை சேர்ந்த பேராசிரியர் ஆகும். பேராசிரியர் வைத்திருப்பது வகுப்பறையில் உள்ள மாணவரின் குழந்தை ஆகும். 

பாடம் குறித்துக் கொள்ள இடையூறாக இருந்ததால், மாணவரின் குழந்தையை பேராசிரியர் தன் மார்போடு சேர்த்து வைத்து கொண்டார். தற்சமயம் ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது பேராசிரியரின் குழந்தை இல்லை என்பது உறுதியாவிகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News