செய்திகள்
மாநிலங்களவை

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு... மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்த எம்பி

Published On 2021-02-08 03:45 GMT   |   Update On 2021-02-08 03:45 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை. 

பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. உடைந்த அணையை ஒட்டியுள்ள சுரங்கங்களில் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய் விஸ்வம், மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளார். இன்றைய அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

இதேபோல் பிஜூ ஜனதா தளம் எம்பி பிரஷாந்த நந்தா மாநிலங்களவையில் ஜீரோ அவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் கிராமங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்போன் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News