செய்திகள்
விஜயேந்திரா

சட்ட போராட்டம் நடத்தி எடியூரப்பா மீதான வழக்குகளை குறைத்துள்ளோம்: விஜயேந்திரா

Published On 2021-02-08 02:53 GMT   |   Update On 2021-02-08 02:53 GMT
முதல்-மந்திரி எடியூரப்பா மீது 30 வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகளின் எண்ணிக்கையை சட்ட போராட்டம் நடத்தி குறைத்துள்ளோம் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், பா.ஜனதா மாநில துணைத்தலைவருமான விஜயேந்திரா கூறியுள்ளார்.
பெங்களூரு :

ராமநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், பா.ஜனதா மாநில துணைத்தலைவருமான விஜயேந்திரா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

எனது தந்தை எடியூரப்பா மீது 30 வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகளின் எண்ணிக்கையை சட்ட போராட்டம் நடத்தி குறைத்துள்ளோம். நான் எனது தந்தைக்கு ஆதரவாக இருந்து பணியாற்றுகிறேன். எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார்.

அவர் வீரசைவ சமூகத்திற்கு ஆதரவாக மட்டும் பணியாற்றவில்லை. அனைத்து சமூக மக்களின் நலனுக்காகவும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வீரபுரா கிராமத்தில் ரூ.90 கோடி செலவில் 112 அடி உயரத்தில் மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு விஜயேந்திரா கூறினார்.
Tags:    

Similar News