செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அதிகமான தடுப்பூசி போட்டதில் இந்தியாவுக்கு 3-வது இடம்

Published On 2021-02-08 02:27 GMT   |   Update On 2021-02-08 02:27 GMT
அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டதில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இன்று (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 57 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 53 லட்சத்து 4 ஆயிரத்து 546 பேர் சுகாதார பணியாளர்கள். 4 லட்சத்து 70 ஆயிரத்து 776 பேர் முன்கள பணியாளர்கள்.

24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 875 அமர்வுகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 473 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 178 அமர்வுகள் நடந்துள்ளன.

அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி போட்டதில், உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் 12 மாநிலங்கள் தலா 2 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளன.உத்தரபிரதேசத்தில் மட்டும் 6 லட்சத்து 73 ஆயிரத்து 542 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News