செய்திகள்
நரேந்திர சிங் தோமர்

வேளாண் சட்ட பிரச்சினையில் முட்டுக்கட்டை விரைவில் நீங்கும்- நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை

Published On 2021-02-08 01:13 GMT   |   Update On 2021-02-08 01:13 GMT
வேளாண் சட்ட பிரச்சினையில் விரைவில் முட்டுக்கட்டை நீங்கும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை வெளியிட்டு உள்ளார்.
குவாலியர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பிரச்சினையில் விரைவில் முட்டுக்கட்டை நீங்கி போராட்டம் முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

விவசாயிகள் போராட்டம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டையை விரைவில் உடைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச காங்கிரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏன் எதுவும் செய்யவில்லை? கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இத்தகைய சீர்திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது அந்த கட்சி பல்டி அடித்துள்ளது.

விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் செய்து காங்கிரசால் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு தோமர் கூறினார்.
Tags:    

Similar News