செய்திகள்
சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலம் ஆக்க விரும்புகிறோம் - சிவராஜ் சிங் சவுகான்

Published On 2021-02-06 22:40 GMT   |   Update On 2021-02-06 22:40 GMT
மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக்க விரும்புவதாக அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்:

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள கட்னி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: 

மத்திய பிரதேசத்தில் மது பானத்திற்கு தடை விதிக்க எனது அரசு விரும்புகிறது. மது இல்லாத மாநிலம் ஆக்குவதே எங்கள் விருப்பம். இதை மதுபானத்துக்கு தடை விதிப்பதால் மட்டும் செய்துவிட முடியாது. குடிப்பவர்களுக்கு மதுபானம் தொடர்ந்து வழங்கப்படும். 

ஆனால் நாங்கள் மதுபானம் இல்லா பிரச்சாரத்தை நடத்துவோம். அப்போது குடிப்பவர்கள் மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். இந்நடவடிக்கையால் நாங்கள் மது இல்லாத மாநிலமாக மாற்றி விடுவோம். இந்த தீர்மானத்தை நாங்கள் எடுத்தே ஆக வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News