செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க 42 குழுக்கள்: மந்திரி சுரேஷ்குமார்

Published On 2021-02-05 03:06 GMT   |   Update On 2021-02-05 03:06 GMT
தனியார் பள்ளி கல்விகள் கல்வி கட்டணம் தொடர்பாக புகார் தெரிவிக்க கர்நாடகத்தில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள் 70 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே பெற்றோரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆயினும் சில தனியார் பள்ளிகளில் முழுமையான கல்வி கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் கல்வி கட்டணம் தொடர்பாக புகார் தெரிவிக்க அனைத்து கல்வி மாவட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு கற்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த கல்வி கட்டணம் தொடர்பாக பெற்றோருக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதுகுறித்து புகார் தெரிவிக்க மாநிலம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பெங்களூருவில் 6 குழுக்கள், மைசூருவில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற கல்வி மாவட்டங்களில் தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
Tags:    

Similar News