செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2021-02-04 04:57 GMT   |   Update On 2021-02-04 04:57 GMT
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
 

குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சமூக வலைதளங்களில் இன்று வரை பரப்பப்பட்டு வருகிறது. வன்முறையில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், சிங் ஒருவர் போலீஸ் அதிகாரியை நோக்கி கத்தியை வீசுவதும், மற்றொரு சிங் முகம் முழுக்க காயம் அடைந்த நிலையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரு புகைப்படங்களும் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட வன்முறையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசை நோக்கி கத்தி வீசிய போலி விவசாயியின் தற்போதைய நிலை இது தான் என கூறும் தலைப்பில் இரு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.



வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், முதல் புகைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி எடுக்கப்பட்டது தான் என தெரியவந்துள்ளது. இரண்டாவது புகைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது ஆகும். இரண்டாவது புகைப்படத்தில் இருப்பது கீர்த்தி கிசான் யூனியனை சேர்ந்த விவசாயி ஆகும். 

இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்ச பெற்ற பின் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்சமயம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது போலீசை நோக்கி கத்தி வீசிய நபர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News