செய்திகள்
ராகுல் காந்தி

கடைசியில் அரசாங்கம் தலைவணங்க வேண்டியிருக்கும்... ராகுல் எச்சரிக்கை

Published On 2021-02-03 10:27 GMT   |   Update On 2021-02-03 10:27 GMT
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியை சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் தான் நமக்கு வாழ்வாதாரம் தருகிறார்கள். டெல்லி ஏன் கோட்டையாக மாற்றப்படுகிறது? நாம் ஏன் விவசாயிகளை அச்சுறுத்துகிறோம், அடித்து கொலை செய்கிறோம்? அரசு ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? இந்த சிக்கலை தீர்க்கவில்லை? இந்த பிரச்சினை நாட்டுக்கு நல்லதல்ல.

2 வருடங்களுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சலுகை இன்னும் நிலுவையில் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். இதற்கு என்ன பொருள்? நீங்கள் சட்டங்களை திரும்ப பெற விரும்புகிறீர்களா? இல்லையா? இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். விவசாயிகள் போராட்டக் களத்தைவிட்டு விலகிச் செல்லாததால், அவர்களின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும். இறுதியில் அரசாங்கம் தலைவணங்க வேண்டியிருக்கும், அதைவிட இப்போது அதைச் செய்வது நல்லது.

இவ்வாறு ராகுல் கூறினார்.
Tags:    

Similar News