செய்திகள்
கோப்புப் படம்

பாதுகாப்புப் படை தாக்குதலில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - உள்துறை அமைச்சகம்

Published On 2021-02-02 17:51 GMT   |   Update On 2021-02-02 17:51 GMT
ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
புதுடெல்லி: 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் எல்லைகளில் நடந்த அத்துமீறல்கள், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலில் பொதுமக்களில் 22 பேரும், பாதுகாப்பு படை வீரர்கள் 24 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நிகழ்ந்த 244 பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்களில் 37 பேர், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 62 பேர் மரணமடைந்துள்ளார். பாதுகாப்பு படை வீரர்களின் பதிலடியில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News