செய்திகள்
சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Published On 2021-02-02 12:25 GMT   |   Update On 2021-02-02 12:25 GMT
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
புதுடெல்லி:

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அட்டவணையை வெளியிட்டார்.

அதில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4-ந்தேதி பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி ஜூன் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகள் நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4-ந்தேதி பொதுத்தேர்வுகள் ஆரம்பமாகி ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரையும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News