செய்திகள்
கோப்புப்படம்

டெல்லி எல்லைகளில் இணையதள சேவை முடக்கம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

Published On 2021-02-01 23:58 GMT   |   Update On 2021-02-01 23:58 GMT
இணையதள சேவை முடக்கம் டெல்லியின் சிங்கு, காஷிபூர், திக்ரி எல்லைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினமான கடந்த 26-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, பயங்கர வன்முறை உண்டானது.

இதனால் நிலவிய பதற்றமான சூழல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக தற்காலிகமாக டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

பின்னர் 29-ந்தேதி இரவு 11 மணி முதல் 31-ந்தேதி இரவு 11 மணி வரை பொது அவசர நிலை, பொது பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் விவசாயிகள் போராடும் டெல்லியின் எல்லை பகுதிகளில் இணையதள சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியது.

இந்த நிலையில், இணையதள சேவை முடக்கம் டெல்லியின் சிங்கு, காஷிபூர், திக்ரி எல்லைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
Tags:    

Similar News