செய்திகள்
ஊரடங்கு

மகாராஷ்டிராவில் பிப்ரவரி 28 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

Published On 2021-01-30 00:26 GMT   |   Update On 2021-01-30 00:26 GMT
மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

தற்போது மாநிலத்தில் ஏறக்குறைய இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்டனர். மும்பையைப் பொறுத்தவரை மின்சார ரெயில் போக்குவரத்தை தொடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கிவிடும். முக கவசம் அணிதல், கூட்டமாக பொது இடங்களுக்கு செல்லக் கூடாது, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை நேற்று மாநில அரசு பிறப்பித்துள்ளது. இதேபோல கடைகள் இரவு 11 மணி வரையும், ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரையும் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Tags:    

Similar News