செய்திகள்
குலாம் நபி ஆசாத்

பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு

Published On 2021-01-28 08:53 GMT   |   Update On 2021-01-28 08:53 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2ம் அமர்வு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும்.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாராளுமன்றத்தில் பலவந்தமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
Tags:    

Similar News