சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியை போலீசார் திடீரென தடுத்ததால், சலசலப்பு ஏற்பட கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பேரணியில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு
பதிவு: ஜனவரி 26, 2021 11:41
கண்ணீர் புகை குண்டு பயன்படுத்திய போலீசார்
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு எல்லையில் இருந்து பேரணியை தொடங்கினர்.
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரை பேரணி வந்தடைந்தபோது, விவசாயிகள் ரிங் ரோடு வழியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 45 நிமிடங்கள் போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு விவசாயிகள் நேரம் கொடுத்தனர். இந்த சாலையில் அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகள் போலீஸ் பாதுகாப்பு வாகனம் மீது ஏறினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
Related Tags :