செய்திகள்
சிங்கி எல்லையில் பேரணி

டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: சிங்கு எல்லையில் பேரணியை தொடங்கிய விவசாயிகள்

Published On 2021-01-26 04:07 GMT   |   Update On 2021-01-26 04:07 GMT
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினர். சிங்கு எல்லையில் டிராக்டர் பேரணி தொடங்கியது.
டெல்லி - ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியை தொடங்கினர். 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா, பவானா, அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும்.

இதையடுத்து திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ, நஜாப்கர், மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும்.


மூன்றாவதாக டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோ மீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News