காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த விமானி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது - விமானி மரணம்
பதிவு: ஜனவரி 25, 2021 23:13
துணை ஆணையாளர் ஓ.பி. பகத்
ஜம்மு:
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கதுவா நகரில் லக்கன்பூர் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்றிரவு 7.15 மணியளவில் திடீரென விபத்திற்கு உள்ளானது.
அந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் இருந்தனர். விபத்தில் காயமடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கதுவா நகர துணை ஆணையாளர் ஓ.பி. பகத் கூறியுள்ளார்.
எனினும், அதில் சிகிச்சை பலனின்றி விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பாதுகாப்பு துறை பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.
Related Tags :