கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை
பதிவு: ஜனவரி 24, 2021 17:38
சசிகலா
பெங்களூரு:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்து வருகிறது. உணவே தாமே உட்கொள்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :