செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆதார் அட்டைகள்.

திருவனந்தபுரம் அருகே ஆக்கர் கடையில் கிடந்த 306 ஆதார் கார்டுகள்

Published On 2021-01-24 09:17 GMT   |   Update On 2021-01-24 09:17 GMT
திருவனந்தபுரம் அருகே ஆக்கர் கடையில் கிடந்த 306 ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டுக்கடா காரக்குளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆக்கர் கடைகள் உள்ளன. இதில் ஒரு ஆக்கர் கடையில் ஏராளமான சாக்குகளில் பழைய பொருட்கள் இருந்தன.

இதில் ஒரு சாக்குப்பையை நேற்று கடையின் உரிமையாளர் திறந்து பார்த்தார். அப்போது சாக்கில் ஏராளமான ஆதார் கார்டுகள் இருந்தது. இதுகுறித்து அவர் கஞ்சியூர் கோணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் சாக்குப்பையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 306 ஆதார் கார்டுகள் இருந்தன. அவை 2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை. இந்த கார்டுகள் கரக்குளம் தபால் நிலையத்தில் பயனாளிகளுக்கு வினியோகிக்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் காரக்குளம் தபால் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணின் கணவர் இந்த ஆதார் கார்டுகளை ஆக்கர் கடையில் போட்டு பணம் வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தபால்நிலைய பெண் ஊழியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபால் நிலைய பெண் ஊழியருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
Tags:    

Similar News