செய்திகள்
மம்தா பானர்ஜி

இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை -நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச்சு

Published On 2021-01-23 09:03 GMT   |   Update On 2021-01-23 09:03 GMT
இந்தியாவில் சுழற்சி முறையிலான 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
கொல்கத்தா:

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு கொல்கத்தாவில் ஷியாம் பஜாரில் இருந்து ரெட் ரோடு வரை பேரணி நடைபெற்றது. பேரணியை முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தபோது, குஜராத், வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களையும் அழைத்துச் சென்றார். அவர், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் ஆட்சியின் கொள்கைக்கு எதிராக நின்றார். 

அவரது பிறந்த நாளை ஒருபோதும் கடைப்பிடிக்காத மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எனது எதிர்ப்பை இன்று பதிவு செய்கிறேன்.

ஆசாத் ஹிந்த் நினைவுச்சின்னத்தை உருவாக்குவோம். அது எவ்வாறு செய்யப்படும் என்பதைக் காட்டுவோம். சிலைகள் மற்றும் புதிய பாராளுமன்ற வளாகத்தை கட்ட அவர்கள் ஆயிரக்கணக்கான கோடி செலவிட்டுள்ளனர்.

இந்தியாவில் சுழற்சி முறையிலான 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவிலிருந்து முழு நாட்டையும் ஆட்சி செய்தனர். நம் நாட்டில் ஒரே ஒரு தலைநகரம் ஏன் இருக்க வேண்டும்?

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News