செய்திகள்
டிராக்டர்கள்

டெல்லிக்குள் ஊர்வலமாக செல்ல 10 ஆயிரம் டிராக்டர்கள் வருகை

Published On 2021-01-23 06:24 GMT   |   Update On 2021-01-23 06:24 GMT
வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு இதுவரை சுமார் 10 ஆயிரம் டிராக்டர்கள் டெல்லி அருகே நிறுத்தப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வருகிற 26-ந்தேதி மிக பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

டெல்லியை இணைக்கும் ரிங்ரோடு புறவழி சாலையில் டிராக்டர் பேரணிக்கு அவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அந்த ரிங் ரோட்டில் டிராக்டர் பேரணியை நடத்தினால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கையில் முடக்கம் ஏற்படும் என்று பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேச போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். எனவே ரிங் ரோட்டில் டிராக்டர் பேரணி நடத்தக்கூடாது என்று தடை விதித்து உள்ளனர்.

மற்றொரு புறநகர் சாலையில் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதித்து உள்ளனர். ஆனால் அதை இதுவரை விவசாயிகள் ஏற்கவில்லை.

இதற்கிடையே டிராக்டர் பேரணியை மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பஞ்சாப், அரியான, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து டிராக்டர்கள் டெல்லிக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதுவரை சுமார் 10 ஆயிரம் டிராக்டர்கள் டெல்லி அருகே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில போலீசார் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.
Tags:    

Similar News