செய்திகள்
ரேணுகாச்சார்யா

நான் மந்திரி பதவியை எதிர்பார்க்கவில்லை: ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

Published On 2021-01-23 02:03 GMT   |   Update On 2021-01-23 02:03 GMT
கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் உள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 7 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதில் மந்திரி பதவி கிடைக்காததால் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் உள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் மந்திரி பதவியை எதிர்பார்க்கவில்லை. எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. 2 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மந்திரிசபையில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். இதை சரிசெய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். நான் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகலாத்ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து, எனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினேன்.

முதல்-மந்திரி எடியூரப்பா என்னிடம் செல்போனில் 3 முறை பேசினார். நான் எங்கள் கட்சிக்கு எதிராக பேசவில்லை. சி.பி.யோகேஷ்வர் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். அவரை பற்றி கேள்வி கேட்டு, எனது வாயில் இருந்து அந்த நபரை பற்றி பேச வைக்க வேண்டாம். அதை நான் விரும்பவில்லை.

இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
Tags:    

Similar News