செய்திகள்
மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

ஆந்திராவில் மீண்டும் பரவும் மர்மநோய் - 22 பேர் பாதிப்பு

Published On 2021-01-22 14:36 GMT   |   Update On 2021-01-22 14:36 GMT
ஆந்திராவின் எலுரு பகுதியில் மீண்டும் மர்மநோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விஜயவாடா:

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற பகுதியில் வசித்துவந்த பலருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
முதியவர் முதல் குழந்தைகள் வரை என மொத்தம் 615 மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டது.

இதனால், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 1 நபர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மர்மநோய் குறித்து ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அரிசியில் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 1 மாதத்திற்கு பிறகு எலுரு பகுதிக்கு அருகே உள்ள கொமர்பல்லி என்ற கிராமத்தில் இன்று 22 பேருக்கு மர்மநோய் தாக்கியுள்ளது. கந்த மாதம் நடத்தது போலவே தற்போதும் சிலருக்கு வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட 22 பேரும் எலுரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த ஆந்திரா மாநில முதல்மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News