செய்திகள்
சோனியா காந்தி

உட்கட்சி தேர்தல் எப்போது? -காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி ஆலோசனை

Published On 2021-01-22 05:48 GMT   |   Update On 2021-01-22 05:48 GMT
ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பாக கருதப்படும் காரிய கமிட்டி கூட்டம் இன்று தொடங்கியது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் ஆலோசனைகளை சோனியா காந்தியிடம் பகிர்ந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், உட்கட்சி தேர்தல், மத்திய பட்ஜெட், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள். ராகுல் தலைவர் பதவிக்கு வர மறுத்துவிட்டால், உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும்வரை சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கேட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News