செய்திகள்
கவுதம் கம்பீர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

Published On 2021-01-21 20:18 GMT   |   Update On 2021-01-21 20:18 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை அளித்து உள்ளார்.
புதுடெல்லி:

அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ராமர் கோவில் கட்டுவதற்காக நாடு முழுவதும் மக்களிடம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராமர் கோவில் கட்டும் பணிக்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை அளித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமர் கோவில் அனைத்து இந்தியர்களின் கனவாக இருக்கிறது. இறுதியாக இந்த நீண்டகால பிரச்சினை முடிவுக்கு வந்தது. இது ஒற்றுமைக்கும், அமைதிக்கும் வழி வகுக்கும். இந்த முயற்சிக்கு நானும், எனது குடும்பத்தினரும் ஒரு சிறிய பங்களிப்பை வழங்கியுள்ளோம்' என தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News