செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

இந்தியாவில் 6 நாட்களில் 9,99,065 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-21 17:34 GMT   |   Update On 2021-01-21 17:34 GMT
இந்தியாவில் கடந்த 6 நாட்களில் 9,99,065 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதன்முதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆறு நாட்களில் 9,99,065 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய 6-வவது நாளில் மட்டும் 1,92,581 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 9,99,065 பேருக்கும் 18,159 மையங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 16-ந்தேதி தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் உயிரிழந்தார். ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தியது தொடர்பான அவர் மரணம் அடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News