செய்திகள்
திருப்பதி கோவில்

தரிசன டோக்கனுக்காக வந்து ஏமாற வேண்டாம்- பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

Published On 2021-01-20 06:37 GMT   |   Update On 2021-01-20 11:09 GMT
வருகிற 24, 26-ந்தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஆன்லைனில் விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்சில் வார நாட்களில் 6 முதல் 7 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 8 முதல் 9 ஆயிரம் டோக்கன்களையும் அளித்து வருகிறது.

டோக்கன்கள் தீர்ந்து போனாலும், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் நோக்கில் அதற்கடுத்த நாட்களுக்கான டோக்கன்களும் முன்னதாக அளிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

தரிசன டிக்கெட் அல்லது டோக்கன்கள் உள்ள பக்தர்கள் மட்டுமே நடைபாதை வழியாகவும், மலை சாலை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். எனவே ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல தரிசன டிக்கெட் கட்டாயமாகும்.

இந்த நிலையில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 24, 26-ந்தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும்.

இலவச தரிசன டோக்கன்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News