செய்திகள்
முகமது அசாருதீன்

கேரள கிரிக்கெட் வீரர் பற்றி சர்ச்சை தலைப்பில் வைரலாகும் புகைப்படம்

Published On 2021-01-20 04:58 GMT   |   Update On 2021-01-20 04:58 GMT
கேரளா கிரிக்கெட் வீரர் பற்றி சர்ச்சை தலைப்பு கொண்ட செய்தி தொகுப்பின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கேரள கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இவரது அபார ஆட்டத்தை பாராட்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.

பல பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்த நிலையில், கேரளாவில் பிறந்த முஸ்லீம் சிறுவன் மும்பையை சிதறடித்தான் எனும் தலைப்பு கொண்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் ஸ்கிரீன்ஷாட்டை ஆய்வு செய்ததில் அது மார்பிங் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த செய்தி கேரளா துவக்க வீரர் அசாருதீன் 37 பந்துகளில் சதமடித்தது பாராட்டை குவிக்கிறது எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது.

வைரல் பதிவு பற்றிய இணைய தேடல்களில் உண்மையான செய்தி தொகுப்பு காணக்கிடைத்தது. வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் இருப்பதும், உண்மையான செய்தியில் இருப்பதும் முற்றிலும் வேறு தலைப்பு ஆகும். அந்த வகையில் சர்ச்சை ஏற்படுத்தும் தலைப்பு கொண்ட ஸ்கிரீன்ஷாட் உண்மையானது இல்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News