செய்திகள்
டிகே சிவக்குமார்

உத்தவ் தாக்கரேவின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை: டி.கே.சிவக்குமார்

Published On 2021-01-19 02:01 GMT   |   Update On 2021-01-19 02:01 GMT
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் கருத்து அவரது தனிப்பட்ட விஷயம் என்றும் எல்லை விவகாரத்தில் அவரது கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
கலபுரகி :

மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எல்லை பிரச்சினையை மராட்டியம் அடிக்கடி கிளப்புவது சரியல்ல. நீர், நில பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளது. மகாஜன் அறிக்கையே இறுதியானது. முதல்-மந்திரி பதவியில் இருக்கும் உத்தவ் தாக்கரே பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது. சிவசேனா தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்குகிறது. ஆனால் முதல்-மந்திரியின் கருத்து அவரது தனிப்பட்ட விஷயம். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை.

எல்லை பிரச்சினை முடிந்துபோன அத்தியாயம். பெலகாவி கர்நாடகத்திற்கு சேர்ந்தது என்பதை நிரூபிக்க அங்கு சுவர்ண சவுதாவை கட்டியுள்ளோம். அதனால் உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவை இல்லை.

உத்தவ் தாக்கரே கூறிவிட்டார் என்பதற்காக பெலகாவி மராட்டியத்தில் சேர்ந்துவிடாது. உத்தவ் தாக்கரே எப்போதும் இத்தகைய கருத்துகளை கூறி வருகிறார். அவரது கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. என்னிடம் சி.டி. எதுவும் இல்லை. இந்த சி.டி. விவகாரம் குறித்து சட்டசபை கூட்டத்தில் விரிவாக பேசுவேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News