செய்திகள்
கோப்புப்படம்

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் - சுவேந்து அதிகாரி உறுதி

Published On 2021-01-18 19:37 GMT   |   Update On 2021-01-18 19:37 GMT
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் என சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து கூறியுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வருகிற சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அது, திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.

மம்தா பானர்ஜியின் சவாலை சுவேந்து அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில், பா.ஜனதா ஊழியர்களிடையே அவர் பேசியதாவது:-

திரிணாமுல் காங்கிரஸ் போல், பா.ஜனதா சர்வாதிகாரமாக நடத்தப்படும் கட்சி அல்ல. யார், எங்கு போட்டியிடுவது என்பதை விரிவான ஆலோசனைக்கு பிறகு கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.

ஒருவேளை, நான் நந்திகிராம் தொகுதியில் நிறுத்தப்பட்டால், மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன். இல்லாவிட்டால், அரசியலை விட்டு விலகுவேன்.

இந்த தேர்தலுக்கு பிறகு, மம்தா கட்சி வங்காள விரிகுடாவில் தூக்கி வீசப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News