செய்திகள்
அகிலேஷ் யாதவ்

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவு: அகிலேஷ் யாதவ்

Published On 2021-01-18 13:08 GMT   |   Update On 2021-01-18 13:08 GMT
மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி மாநிலக் கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். வெறுப்பை பரப்பி ஆட்சியை பிடிக்க விரும்பும் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்த ஆதரவு. வெறுப்பை பரப்பி 2017 உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News