செய்திகள்
கைது

ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற ரெயில்வே அதிகாரி கைது - சி.பி.ஐ. நடவடிக்கை

Published On 2021-01-18 02:57 GMT   |   Update On 2021-01-18 02:57 GMT
ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்திய ரெயில்வேயின் பொறியாளர் மகேந்தர் சிங் சவுகான் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:

இந்திய ரெயில்வேயின் பொறியாளர் சேவைப் பிரிவின் மூத்த அதிகாரி் மகேந்தர் சிங் சவுகான். இவர், வடகிழக்கு எல்லை ரெயில்வே காண்டிராக்ட் பணிகள் ஒரு ஏஜென்சிக்கு கிடைக்க உதவியாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்தது. அவர் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார், வடகிழக்கு எல்லை ரெயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள அசாமின் மாலிகன் மற்றும் டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மொத்தம் 20 இடங்களில் சோதனை செய்து லஞ்சப் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மகேந்தர் சிங் சவுகான் நேற்று கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News