செய்திகள்
விஜய் மல்லையா

விஜய் மல்லையா விவகாரம் - சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையம் உத்தரவு

Published On 2021-01-17 20:43 GMT   |   Update On 2021-01-17 20:43 GMT
விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார். அவரை நாடு கடத்தும் உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றார். அதற்கு முன்பு, 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் அவருக்கு எதிராக தேடப்படும் நோட்டீசுகளை சி.பி.ஐ. வெளியிட்டது.

முதல் நோட்டீசில், விஜய் மல்லையா தப்ப முயன்றால் சிறைபிடிக்குமாறும், 2-வது நோட்டீசில் அவரது நடமாட்டம் பற்றி தகவல் தெரிவித்தால் போதும் என்றும் விமான நிலையங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த 2 வெவ்வேறு நோட்டீசுகளும் எந்த விதியின் கீழ் வெளியிடப்பட்டது என்று சி.பி.ஐ.யிடம் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த விகார் துர்வே என்ற தகவல் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்தார். ஆனால், அந்த தகவலை அளிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டது. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்திடம் விகார் துர்வே விண்ணப்பித்தார். அவர் கேட்ட தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News