மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என மத்திய இணை அமைச்சர் ஆனந்த் சுக்லா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து: மத்திய அமைச்சர் கடும்தாக்கு
பதிவு: ஜனவரி 17, 2021 22:05
மம்தா பானர்ஜி, ஆனந்த் சுக்லா
மத்திய இணை அமைச்சர் ஆனந்த் சுக்லா மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். மம்தா பானர்ஜி குறித்து ஆனந்த் சுக்லா கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜி முற்றிலும் வங்காளதேச நபராகிவிட்டார். அவர் அங்குள்ள இஸ்லாமிக் பயங்கரவாதிகள் வழிகாட்டுதலின்படி பணிபுரிந்து வருகிறார். அவர் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தாகிவிட்டார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, வங்காளதேசத்தில் தஞ்சம் அடைய தயாராக இருப்பார்’’ என்றார்.
Related Tags :