செய்திகள்
கோப்பு படம்

ராணுவத்தில் உள்ள மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Published On 2021-01-16 20:17 GMT   |   Update On 2021-01-16 20:21 GMT
ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,91,181 பேருக்கு
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அந்த வகையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் பங்கேற்றனர்.

முதல்கட்டமாக நேற்று மட்டும் ராணுவத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News