செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

Published On 2021-01-16 19:20 GMT   |   Update On 2021-01-16 19:20 GMT
‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-அப் நிறுவனம் அந்நிறுவன செயலியை உபயோகிப்பவர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்கும் வகையில், புதிய விதிமுறைகளை பிப்ரவரி 8-ந் தேதி முதல் மாற்றம் செய்வதாக அண்மையில் அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்த நடவடிக்கையை மே மாதம் வரை தள்ளி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இது தொடர்பாக இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் விவேக் நாராயண் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை தகவல் பரிமாற்றத்துக்கு மிக முக்கிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்நிறுவனம் அறிவித்துள்ள புதிய கொள்கை விதிமுறை மாற்றம் மக்களின் அந்தரங்க உரிமைக்கு எதிராகவும், சுதந்திரமான வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.
Tags:    

Similar News