செய்திகள்
அமித்ஷா

தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை - அமித்ஷா பாராட்டு

Published On 2021-01-16 18:56 GMT   |   Update On 2021-01-16 18:56 GMT
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது ஒரு வரலாற்று சாதனை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது ஒரு வரலாற்று சாதனை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘உலகின் மிகப்பெரிய தடுப்பூசி பிரசாரம் இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான ஆற்றலையும் நமது தலைமையின் சக்தியையும் காட்டுகிறது. மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய நெருக்கடிக்கு எதிராக போரில் வெற்றி பெற்ற சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், இந்த வரலாற்று சாதனை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி உலக மன்றத்தில் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை குறிக்கிறது என்றும் பிரதமர் மோடி தலைமையிலான இந்த புதிய இந்தியா பேரழிவுகளை வாய்ப்புகளாகவும், சவால்களை சாதனைகளாகவும் மாற்றும் ஒரு இந்தியா என்றும் அமித்ஷா கூறினார்.
Tags:    

Similar News