செய்திகள்
அகிலேஷ் யாதவ்

ஏழைகள் இலவச கொரோனா தடுப்பூசியை பெறுவது எப்போது?: அகிலேஷ் யாதவ் கேள்வி

Published On 2021-01-16 16:15 GMT   |   Update On 2021-01-16 16:15 GMT
முன்கள பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையில், ஏழைகள் இலவச கொரோனா தடுப்பூசி போடுவது எப்போது என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் ஏழைகள் இலவச கொரோனா தடுப்பூசி பெறுவது எப்போது? என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘‘ஒரு வருடத்திற்குப் பிறகு சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்பதை உறுதி செய்வோம்.

தடுப்பூசி மையங்களுக்கு முறையான நிதி வழங்கப்படுகிறதா? என்பதையும் நான் அறிய விரும்புகிறேன், இல்லையெனில் வேலை எவ்வாறு செய்யப்படும்?. தடுப்பூசி சேமிப்பதற்கும் போக்குவரத்து செய்வதற்கும் சரியான ஏற்பாடுகள் உள்ளதா என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். மருத்துவர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அரசு மீது இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News