செய்திகள்
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த மத்திய அமைச்சர் தோமர்

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

Published On 2021-01-15 11:56 GMT   |   Update On 2021-01-15 12:03 GMT
வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத்தயார். ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று  மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இதற்கிடையில் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது.

ஐந்து மணி நேர பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News