செய்திகள்
தடுப்பூசி

நாடு முழுவதும் 3006 மையங்கள்... கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் மோடி

Published On 2021-01-15 07:10 GMT   |   Update On 2021-01-15 07:10 GMT
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதிலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நாளை காலை 10.30 மணிக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

முதற்கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி நபர்களுக்கு செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News