செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை தொடங்க வேண்டும் - 500 வக்கீல்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

Published On 2021-01-13 23:33 GMT   |   Update On 2021-01-13 23:33 GMT
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணயை தொடங்க கோரி 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் தற்போது நடைபெறும் காணொலி விசாரணையில் இணையதள இணைப்பில் பிரச்சினை உள்ளது. காணொலி விசாரணை தொடர்பாக பதிவாளர் முறையாக மேலாண்மை செய்யவில்லை. வழக்குகள் முறையீடு தொடர்பாக உள்ள பிரிவில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் அளிப்பதில்லை. உரிய காரணம் ஏதுமில்லாமலேயே முறையீடு செய்யப்படும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நாள்தோறும் ஏற்படும் செலவுகளை சமாளிக்க இயலாமல் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சங்கத்தில் உள்ள 50 சதவீத இளம் வக்கீல்கள் டெல்லியை விட்டு வெளியேறி விட்டனர். சுப்ரீம் கோர்ட்டை நம்பி பல வக்கீல்கள் பணி செய்து வருகின்றனர். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News