செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

அமெரிக்க பாராளுமன்றத்தில் பேட்மேன் என கூறி வைரலாகும் வீடியோ

Published On 2021-01-11 04:50 GMT   |   Update On 2021-01-11 04:50 GMT
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தினுள் பேட்மேன் வந்ததாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. அப்போது அங்கு நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனிடையே பேட்மேன் உடை அணிந்த நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கேப்பிட்டல் கட்டிடத்தில் எடுக்கப்பட்டதாகவும், போராட்டக்குழுவுடன் பேட்மேன் வந்திருக்கிறார் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த வீடியோ கருப்பினத்தவரை காவல் துறை அதிகாரி கொன்ற சம்பவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பாப் கேபிள் என்பவர் பேட்மேன் உடையில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது ஆகும்.

அந்த வகையில் கேப்பிட்டல் கட்டிடத்திற்கு பேட்மேன் வரவில்லை என்பதும், வைரல் வீடியோ கேப்பிட்டல் கட்டிடத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News