செய்திகள்
நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் சொத்து மதிப்பு ரூ.64.98 கோடி

Published On 2021-01-10 23:10 GMT   |   Update On 2021-01-10 23:10 GMT
ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக், தனது சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டு உள்ளார். அதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக ரூ.64.98 கோடிமதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்:

கடந்த நிதியாண்டின் கணக்கு விவரத்தை வெளியிட்டுள்ள அவர், பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் வெளிப்படையான சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனக்கு டெல்லி, புவனேஸ்வர் உள்பட 7 இடங்களில் வங்கி கணக்கு இருப்பதாகவும், வங்கி சேமிப்பு மற்றும் நகைகள் என அசையும் சொத்துக்கள் ரூ.1.34 கோடி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

பரிதாபாத் அருகே திக்ரி கேரா கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள 22.7 ஏக்கர் நிலம், டெல்லி அப்துல்கலாம் சாலையில் ரூ.43 கோடி மதிப்புள்ள சொத்து, புவனேஸ்வர் விமான நிலையம் அருகே ரூ.9.52 கோடி மதிப்புள்ள கட்டிடம் போன்ற அசையா சொத்துகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்நாயக்கிற்கு ரூ.1.25 கோடி கடன் உள்ளது, கடந்த ஆண்டு ஒப்பந்தத்தின்படி ஒரு நிலத்தை விற்பதற்காக முன்பணமாக அவர் இந்த தொகையை பெற்றுள்ளார். அதேபோல கடந்த ஆண்டு தனது அக்காவிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும், அதை திரும்ப செலுத்தியதாகவும் கூறி உள்ளார். நவீன் பட்நாயக்கின் வெளிப்படையான சொத்து விவர அறிவிப்பு, பலரால் பாராட்டப்பட்டுள்ளது, பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.
Tags:    

Similar News