செய்திகள்
இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் போல்சனரோ

அவசரமாக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு மருந்து தேவை- பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

Published On 2021-01-10 09:19 GMT   |   Update On 2021-01-10 09:19 GMT
பிரேசில் நாட்டிற்கு அவசர தேவைக்காக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை அனுப்பும்படி அதிபர் போல்சனரோ இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதலில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

தடுப்பூசி போடும் பணி 16ம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளது. இதேபோல் கொரோனா தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தின் 2 மில்லியன் டோஸ்களை (20 லட்சம் டோஸ்கள்) அவசர தேவை அடிப்படையில் அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளர்.

‘இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை பாதிக்காத வகையில், அவசர தேவைகளுக்கு 2 மில்லியன் டோஸ் மருந்தை அனுப்ப வேண்டும்.
கொரோனா வைரசுக்கு எதிராக பிரேசில் அரசு தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரேசில் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசிகளில், இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகளும் அடங்கும்’ என்றும் பிரேசில் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News