ஜார்க்கண்ட் மாநில சபாநாயகர் ரவீந்திரநாத் மஹதோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி
பதிவு: ஜனவரி 09, 2021 23:45
கொரோனா வைரஸ்
புதுடெல்லி:
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சபாநாயகராக பதவி வகித்து வரும் ரவீந்திரநாத் மஹதோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :